முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலம் அருகில் ஆலங்கடியில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு பயிற்சி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்
Image Unavailable

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஆலங்குடி கிராமத்தில் விவசாயி வயலில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.இதில் நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் முனைவர். இராஜாரமேஷ் கலந்து கொண்டு நெல்பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான இலைச்சுருட்டுபுழு,குருத்துப்பூச்சி, புகையான், ஆனைக்கொம்பன் ஈ,மாவுப்பூச்சி,கதிர்நாவாய்பூச்சி ஆகிய முக்கிய நோய் களான குலைநோய் ,பாக்டீரியா கருகல் நோய்,நெற்பழநோய் குறித்தும் மற்றும் வயலில் எலி தாக்குதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும் நெல்பயிரில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சகள் தீமை செய்யும் பூச்சிகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்ப ட்டது.இயற்கை நோய் கட்டுப்பாட்டு முறைகளான சூடோமோனஸ் பயன் படுத்தி விதை நேர்த்தி செய்தல் மற்றும் வயலில் தெளிக்கும் முறைகள் பற்றியும் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு முறைகளான இனக்கவர்ச்சி பொபறி பயன்படுத்தி குருத்துப்பூச்சியை கவர்ந்திழுக்கும் முறைகள்,டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தி இலைசுருட்டுப்புழு மற்றும் குருத்துப்பூச்சிகளை அழிக்கும் முறைகள் பற்றி செயல் விளக்கத்துடன் வயல்வெளியில் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தார். பயிற்சியில் நிலைய உதவி பேராசிரியர் முனைவர்.காமராஜ்,திட்ட உதவி பேராசிரியர் ரேகா கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago