முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் : கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
பணிகள்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், குழந்தைகள் தொடர்பான பணிகளை கண்காணிப்பதற்காகவும் மாவட்ட கலெக்டர் அவர்களை தலைவராகவும், மாவட்ட நீதிபதி அவர்களை இணைத்தலைவராகவும் கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பிரச்சனைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பானவற்றில் இக்குழுவிலுள்ள ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை முழுமையாக செய்தால் நமது பகுதிகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை முழுமையாக தடுக்க முடியும். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டால் அது குறித்த தகவலினை மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கோ அல்லது சைல்டுலைன் 1098 என்ற எண்ணிற்கோ உடன் தொடர்பு கொள்ள வேண்டும்"; என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், முதன்மை குற்றவியல் நீதிபதி பக்கிரிசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரோசிலின் ஜாய்ஸ் கிரேஸ் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்