முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டத்தில் சீமை கருவேலை மரங்கள் அகற்றும் பணி உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பொதுபணித்துறை, பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் வாயிலாக நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று (31.12.2016) பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

கருவேல மரங்கள்

 

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

நிலத்தடி நீருக்கும் விவசாயிகளுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் சீமை கருவேலை மரங்களை அகற்றுவதற்காக நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி மற்றும் நகர பகுதிகளையொட்டி உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. கரூர் நகராட்சி சுங்ககேட் பகுதி, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பகுதி, திருமாநிலையூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பின்பகுதி, சுக்காலியூர், வெள்ளியணை குளம் போன்ற பகுதிகளில் இப்பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியின் முன்னேற்றம் குறித்து இன்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு இதற்கென்று அமைக்கப்பட்ட தனி அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சீமை கருவேலை மரங்கள் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அரசுசார்ந்த நிலங்களில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்வதை போல் தனியார் நிலங்களிலுள்ள சீமை கருவேலை மரங்களையும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோமகன், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், அமராவதி ஆற்று பாதுகாப்பு வடிநில உதவி கோட்டப்பொறியாளர் சரவணன், நகராட்சி ஆணையர் அசோக் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கண்ணன், வட்டாட்சியர் துரைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்