பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நியாய விலைக்கடைகளில் உள்தாள் வழங்கப்படும் : கலெக்டர் க.நந்தகுமார் தகவல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2017-ம் ஆண்டு;ககுரிய உள்தாள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளில் இன்று முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

உள்தாள் ஒட்டும் பணி

 

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,72,803 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில் பெரம்பலூர் வட்டத்தில் 47,065 குடும்ப அட்டைகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 45,891 குடும்ப அட்டைகளும், குன்னம் வட்டத்தில் 46,412 குடும்ப அட்டைகளும் ஆலத்தூர் வட்டத்தில் 33,435 குடும்ப அட்டைகளும் புழக்கத்தில் உள்ளன.

புழக்கத்தில் உள்ள 1,72,803 குடும்ப அட்டைகளுக்குரிய 2017-ம் ஆண்டிற்கான உள்தாள் நியாய விலைக்கடையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்தாள் 01.01.2017 முதல் வழங்கப்படவுள்ளது. ஒரே நாளில் அதிகளவில் கூட்டம் வருவதனை தவிர்ப்பதற்காக குடும்ப அட்டைதாரர்கள் நாள்வாரியக பிரித்து வழங்கப்படவுள்ளது. இதன் விபரம் சம்மந்தப்பட்ட நியாய விலைகடைகளில் உள்ள விளம்பர பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு உரிய தினத்தன்று நியாய விலைக்;கடைக்கு நேரில் சென்று வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் செய்து உள்தாள் பெற்றுக்கொள்ளலாம். நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உள்தாள் இணைத்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் உரிய தினத்தன்று உள்தாள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் உரிய தேதியில் உள்தாள் பெறாதவர்களுக்கு தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அன்றைய தினம் நியாய விலைக்கடைகளில் சென்று உள்தாள்கள் வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: