அரசு இ_சேவை மையங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      நீலகிரி

அரசு இ_சேவை மையங்களில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் பெற ஓய்வூதியதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

நீலகிரி மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ_சேவை மையங்களில் தங்ளது ஆதார் எண் மற்றும் ஓய்வூதிய கொடுவை எண் மூலம் வருடாந்திர நேர்காணலுக்கு மின்னணு உயிர் வாழ் சான்றிதழ் பதிவு செய்யும் பணி 24.11.2016 முதல் நடைபெற்று வருகிறது. ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண், நிரந்தர கணக்கு எண் மற்றும் ஓய்வூதிய கொடுமை எண்ணுடன் இ_சேவை மையங்களில் நேரிடையாகச் சென்று மின்னணு உயிர் வாழ் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.10 செலுத்தினால் போதுமானது.

மேலும் ஆதார் எண்ணை கருவூலங்களில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக மாவட்ட, சார்நிலை கருவூலங்களில் அதனை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: