கோபி ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் வருகை நலத்திட்டம் - சாதனையாளர்கள் விருதுகளை வழங்கினார்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு
IMG 2116

கோபி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் சாதனையாளர்கள்; விருதுகள் வழங்கப்பட்டது.

          மாவட்ட ஆளுநர் ஜெய பிரகாஷ் உபாத்தியா அவரது துணைவியார் ராதிகா ஜெயபிரகாஷ் ஆகியோர் கோபி வருகை தந்தார்கள். அவருக்கு பாரியூர் கோயிலில் வைத்து வரவேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ரூ.25 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ரோட்டரி பேருந்து நிழற் கூடத்தை மாவட்ட ஆளுநர் திறந்து வைத்தார். இந்த நிழற்க்கூடம் ரோட்டரி 100ஆம் ஆண்டு நினைவாக திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கோபி ஆஞ்சநேயர் நகரில் ரூ  5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரோட்டரி சமூதாயத்தை திறந்து வைத்தார்.

          விழாவில் 28 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பண்டிகை புத்தாடைகள் வழங்கப்பட்டது. பழங்குடியினருக்கு விடுதியில் உணவுக்கான அரிசி வழங்கப்பட்டது. இந்திய ராணுவ வீரர் எஸ்.முருகேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த தேன் வளர்ப்பு விவசாயி ஏ.பார்த்திபனுக்கு சிறந்தவிவசாயி விருதும், மாநில அளவில் ஒவியப்போட்டியில் கலந்து கொண்ட கிராமபுர மாணவர் சி.விக்னேஷ்க்கு சிறப்பு அங்கீகார விருதும், பிரேசில் நாட்டிலிருந்து இளைய சிறப்புமாணவ தூதர் இந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள வந்த  ஜூலியானபய்வாவுக்கு சிறப்பு கௌரவ விருதும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து பிரேசில்நாட்டிற்கு இளைய சிறப்பு மாணவ தூதராக இந்திய கலாச்சாரத்தை அந்நாட்டு மக்களுக்கு கற்றுக் கொடுத்ததிற்காக சிறப்பு அங்கீகார விருதும் வழங்கப்பட்டது.

          விழாவில் கோபி ரோட்டரி சங்கத்தின் தலைவர் ம.ஜா.முஹம்மது ரியாஜ், மற்றும் உறுப்பினர்கள் மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்ல சிவம், துணை ஆளுநர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் மற்றும் வழக்கறிஞர் நடராஜன், டாக்டர் பால முருகன், தொழில் அதிபர் நடராஜ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இறுதியில் எஸ்.கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: