ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

டாக்டர் அம்பேத்கர் கால்பந்துகுழு மற்றும் துப்பாக்கி(எ) சந்திரன் நினைவாக 9 ஆம் ஆண்டு அளவிலான ஐவர் கால்பந்து போட்டி மரப்பாலம் மகாஜனபள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் ஈரோடு,சென்னை,திருச்சி,திண்டுக்கல்,மதுரை,சேலம்,கிருஷ்ணகிரி,கரூர்,திருப்பூர்,ஆகிய மாவட்டங்களில் இருந்து24 அணிகள்பங்கேற்றன நேற்றைய விளையாட்டில்பெருந்துறை-அம்மாபேட்டை ,அந்தியூர்-லக்காபுரம்,சங்ககிரி- வடுகப்பட்டி அணிகள் மோதின இதில் பெருந்துறை(2-0) லக்காபுரம் (2-0)சங்ககிரி(டைபிரேக்கர்) முறையில் வெற்றிபெற்றது.

பரிசுகள்

நடுவர்களாக கதிர்வேல்(வாசவி கல்லூரி)தண்டபாணி,ரமேஷ்கண்ணா,மோகன்,சரவணன்,நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். பரிசுகள் முறையே 8001,6001,4001 மற்றும் ஆட்டநாயகன் விருது வழங்கப்டுகிறது.விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் கால்பந்துகுழுநிறுவனர் என்.நேச குமாரன்,செயலாளர்வி.குருஷ்ணசாமி,செயலாளர் வி.சம்பத்,குணசேகரன், மற்றும்முன்னாள்வீரர்கள்,சந்திரன் நண்பர்கள்செய்திருந்தனர் .இன்று (ஞாயிறு) மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்: