முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: அமெரிக்க நடவடிக்கைக்கு ரஷியா பழிவாங்காது - அதிபர் புடின் அறிவிப்பு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் வெளியேற்ற நடவடிக்கைக்கு ரஷியா பழிவாங்காது என்று அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யா மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர் தல் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்தது. அதில் ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.ஆனால் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி மற்றும் அதன் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் இ-மெயில் தகவல்களை திருடியது. அதன் மூலம் ஹிலாரி மீது  தவறான தகவல்களை ரஷியா பரப்பி டிரம்பை வெற்றி பெற செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரிந்த ரஷிய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 35 பேரை அதிபர் ஒபாமா வெளியேற்றினார்.

புடின் அறிவிப்பு

அமெரிக்காவில் உள்ள 35 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக, ரஷியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார்.  இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பதற்கு அடுத்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்பது வரை, தான் பொறுத்திருக்கப் போவதாக புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அளவிற்கு அவரது பரிந்துரைகள் இருந்தன. ரஷிய அரசு இணையத் திருட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago