முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பிஅரசியல் நாடகம் 24 மணிநேரத்தில் முடிந்தது சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் மீண்டும் சேர்க்கப்பட்டார்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்தரப்பிரதேச மாநில அரசியல் நாடகம் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. கட்சி தலைமை முடிவுக்கு எதிராக செயல்பட்டதாக  முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் ராம் கோபால் யாதவ் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். சமாஜ் வாதியின் தலைவர் முலாயம் சிங் உத்தரவின்படி அவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டதாக கட்சியின் தலைவர் சிவ்பால் யாதவ் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது  முலாயம் சிங்கின் சமாஜ் வாதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் உள்ளார்.    இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என ஆளும் சமாஜ் வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ்,  பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் , தனது சித்தப்பாவுமான சிவ்பால் யாதவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இதனால் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில்  அகிலேஷின் ஆதரவாளர்கள் பலருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முலாயம் சிங் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 50 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

இதனால் அகிலேஷ் யாதவ் அதிருப்தி அடைந்து போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனால், முலாயம் சிங், மற்றும் அகிலேஷ் யாதவுக்கு இடையே அதிருப்தி காணப்பட்டது.
இந்த நிலையில், அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார். சிவ்பால் யாதவ் மற்றும் முலாயம் சிங் நடத்திய முக்கிய ஆலோசனைக்கு பின்னர் அகிலேஷ் மீது நடவவடிக்கை எடுக்கப்பட்டது னால் நேற்று திடீரென்று அகிலேஷ் யாதவ் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். மாநில அரசியல் நாடகம் 24 மணிநேரத்திற்குள் முடிவுக்கு வந்தது.  முதலில் 6ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ்  ஆகியோர் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள்.  கட்சி தலைவர் முலாயம் சிங் உத்தரவுப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சிவ்பால் யாதவ் தெரிவித்தார்.சமாஜ் வாதி கட்சிக்குள் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் நடவடிக்கையில் முலாயம் சிங் ஈடுபட்டுள்ளார். கட்சியில் மீண்டும்  சேர்க்கப்பட்ட பின்னர் அகிலேஷ் யாதவ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் உணர்ச்சி பெருக்குடன் பேசினார். தனது தந்தையும் , கட்சி நிறுவனரின் பரிசாக மீண்டும் மாநில முதல்வராக ஆகிறேன் என கூறினார்.\அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் சமாஜ் வாதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்ததை நடத்தினார். இதில் கட்சியின் 229 எம்.எல்.ஏக்களில்  200 பேர் அகிலேஷ்  யாதவிற்கு ஆதரவாக இருப்பதாக உறுதியளித்தார்கள். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்