முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

130 கோடி மக்களை பாதிக்கும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதா? கட்டுப்பாடுகளை மோடி தளர்த்த ராகுல் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  -  130 கோடி மக்களை பாதிக்கும்  வகையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதா? ரூபாய் வங்கிகளில்  ரூபாய்  நோட்டுகளை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள் என்று காங்கிரஸ் துணை  தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.  பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று அறிவித்தார்.  நாட்டில் உள்ள  கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு, ஊழல், தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல்  ஆகியவற்றை தடுக்க இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  மோடி அரசின் முடிவால் சாதாரண, நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் வங்கி கிளைகளில் பணம் எடுக்க காத்திருக்கிறார்கள் . எனவே ரூபாய் நோட்டு முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என  காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய எதிர் கட்சிகள்  தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

இந்த நிலையில் ஏ.டி.எம்களில் இருந்து ரூ4ஆயிரத்து 500 வரை எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறுகையில், பிரதமர் மோடியின் தன்னிச்சையான முடிவால்  உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில்  130 கோடி மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்கள் சிரமங்களை தவிர்ப்பதற்கு கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள். பழைய ரூபாய் நோட்டு தடையால்  50 நாட்கள் மட்டுமே பிரச்சினை இருக்கும். அதன் பின்னர் மக்களுக்கு பணம் தாராளமாக கிடைக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் இன்னும் மக்கள் அவதி நீடிக்கிறது என ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்