முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஆங்கில புத்தாண்டு 2017 தொடங்கியதையொட்டி, உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்று உற்சாகமாகக் கொண்டாடினர். தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.

முதல் நாடு நியூசிலாந்து :

கீரீன்விச் நேரப்படி, உலகில் புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. அதன்படி, தலைநகர் ஆக்லாந்தின் ஸ்கை டவர் முன்பு கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், புத்தாண்டை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாண வேடிக்கையுடன், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்து புதிய ஆண்டை வரவேற்றனர்.

ஆஸ்திரேலியா:

இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் திரண்டிருந்த சுமார் 15 லட்சம் மக்கள், புத்தாண்டை வரவேற்று நடைபெற்ற கண்ணைக் கவரும் பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில், 2016ம் ஆண்டு உயிரிழந்த பிரபல இசைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிட்னியை தொடர்ந்து, மெல்பர்ன் நகரின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. கிங்ஸ் டொமைன்,  டாக்லாண்ட்ஸ் பூங்கா மற்றும் டிரஸ்சரி  பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 லட்சம் மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புத்தாண்டில், ஆஸ்திரேலியா முழுவதும் பயன்படுத்தப்பட்ட வாணவேடிக்கைகளின் அளவு ஒரு புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் விக்டோரியா துறைமுகத்தில் வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.

வடகொரியா:

வடகொரியாவின் பியாங்யாங் நகரில் 2017-ம் ஆண்டு புத்தாண்டு கோலாகலமாக தொடங்கியது. வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

இந்தியா:

இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. டெல்லி, மும்பை, பெங்களூரு, போபால், கோவா உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னை:

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின. மெரினா கடற்கரையில்ஏராளமானோர் ஒன்று திரண்டு, வாழ்த்தொலிகளுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தந்தனர். ஐந்து ரதம், அர்ஜுனன் தபஸ், கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளித்தனர். புத்தாண்டையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் திரண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி கடற்கரை சாலையில் கிராமிய இசை விழா நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago