முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறந்த வெளியில் மலம் கழித்தல் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: கலெக்டர் பிரசாந்த் பிரசாந்த் வடநேரே துவக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மக்கள் பங்கேற்புடன் - தூய்மை திருவண்ணாமலை என அறிவித்து லோகோ அறிமுகம் செய்துவைத்து அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட பயன்படுத்துதல் மற்றும் திறந்த வெளி மலம் கழித்தல் பழக்கத்தை முற்றிலும் ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே துவக்கிவைக்கிறார். திருவண்ணாமலை மாவட்ததில உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுரையின்பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி வழிகாட்டுதலின்பேரில் இன்று முதல் வருகிற 7ந் தேதி வரை தூய்மை பாரத இயக்கத்தின்மூலம் அனைத்து ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 69 ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான (கி.ஊ.) மு.சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் இன்று 2ந் தேதி மக்கள் பங்கேற்புடன் ஊராட்சி ஒன்றிய பொறுப்பு அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி பயன்படுத்துதல் மற்றும் திறந்த வெளி மலம் கழித்தல் பழக்கத்தை முற்றிலும் ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்நடத்தப்படவுள்ளன. நாளை (3ந்தேதி) ஊராட்சிகளில் சமூக வரைபடம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை கட்டி பயன்படுத்துதல், 4ந் தேதி வீடு வீடாக மகளிர் குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 5ந் தேதி பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்துதல், 6ந் தேதி ஒரு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட பணி துவங்குதல், 7ந் தேதி ஒவ்வொரு ஊராட்சியிலும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தி.மலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான (கி.ஊ) மு.சுந்தரமூர்த்தி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பி.சுதாகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்