முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு ஏ.டி.எம்.களில் நேற்று முதல் ரூ.4 ஆயிரம் வந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு

2-ரூ.1000 மற்றும் 500 பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது.பெரும்பாலான மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி விட்டனர்.புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபோது ஏ.டி.எம்.மில் ஒரு கார்டுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. அதற்கு மேல் எடுக்க முடியாத நிலை நிலவி வந்தது. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பொது மக்கள் மிகவும் திண்டாடி போனார்கள். இதேபோல் வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது.

ரூ4500 கிடைத்தது.

நேற்று முதல் ஏ.டி.எம் மையத்தில் ரூ.4ஆயிரத்து 500 எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படிநேற்று  4500 கிடைத்தது.ஆனால் ஈரோட்டில் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணத்தால் ஏ.டி.எம்.மில் ரூ.4 ஆயிரம் மட்டும் (இரண்டு 2 ஆயிரம் நோட்டுகள்) கிடைத்தது.எப்படியோ கூட ரூ.2 ஆயிரம் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் ரூ.4 ஆயிரத்தை பெற்றுச்சென்றனர்.அதேசமயம் வங்கியில் வாரம் ரூ.24 ஆயிரம் பெறமுடியும் என்ற நிலையே தொடர்கிறது.ஏ.டி.எம்.களில் தொடர்ந்து 2 ஆயிரம் முழு நோட்டுகள் மட்டும்தான் வருகிறது. 500 ரூபாயை கண்ணிலேயே பார்க்க முடியவில்லை. மேலும் ஏ.டி.எம்.மில் 100 ரூபாய் நோட்டுகள் வராதது பொதுமக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது

ரூ. 1.37 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை ஜன 2- பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 3,758 மூட்டைகளில் 1 லட்சம் 80 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 73.55-க்கும், அதிகபட்சமாக ரூ. 76-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 54.05-க்கும், அதிகபட்சமாக ரூ. 72.65-க்கும் விற்பனையானது.மொத்தம் ரூ. 1 கோடியே 37 லட்சத்துக்கு ஏலம் மூலமாக விற்பனையானது என சங்கத் தலைவர் அருள்ஜோதி கே.செல்வராஜ் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்