108 அவசரகால ஆம்புலன்ஸில் வேலை டிரைவர், உதவியாளர் பணிக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு

108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, டி.பி.ஹாலில் வரும், 6ம் தேதி காலை, 900மணி முதல், 200 மணி வரை நேர்முகத்தேர்வு நடக்கிறது.டிரைவர் பணியிடத்துக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி தேவை. நேர்முக தேர்வன்று, 23 வயது முதல், 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ உயரத்துக்கு குறையக்கூடாது. மூன்று ஆண்டு இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வைத்திருக்க வேண்டும். மாத ஊதியமாக, 11 ஆயிரத்து, 100 ரூபாய் வழங்கப்படும்.

மாத ஊதியம், 11 ஆயிரத்து, 600 ரூபாய் 

எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடத்தப்படும்.மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்டரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, இயற்பியல், வேதியியல் அல்லது ஜி.எம்.எம், ஏ.என்.எம், டி.என்.ஏ, டி.எம்.எல்.டி, டி.பார்ம் படித்திருக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியம், 11 ஆயிரத்து, 600 ரூபாய் வழங்கப்படும். அரசு மருத்துவ கல்லுாரியில் ஓராண்டு சர்டிபிகேட் படித்திருந்தால், 10 ஆயிரத்து, 600 வழங்கப்படும். இதற்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, 73977-24813, 73388-94971, 70941-61122 என்ற மொபைல்போன் எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: