முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி :  பெட்ரோல் - டீசல் விலை நேற்று திடீரென்று உயர்ந்தது.  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29ம், டீசல் லிட்டருக்கு 97காசும் உயர்ந்தது.  இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.  இந்த   விலை உயர்வில்   மாநில வரிகள் இடம் பெறவில்லை. அந்த வரிகள் இடம் பெறும் போது உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்ப மேலும் விலை அதிகரிக்கும்.

இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ70 ஐ எட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ70-க்கு கீழேதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல்,டீசல்  விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. இப்படி மாற்றி அமைக்கப்படும் விலை மாற்றத்தில்  பல முறை  இந்த எரி பொருள்கள் விலை கடுமையாக ஏறுகின்றன. ஆனால் விலை குறைப்பு என்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் -டீசல் விலையை மாற்றி வருகிறோம் என எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

சர்வ தேச சந்தையில் நிலவும்  கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல் , டீசல் விலையை அதிகரிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அப்படி செய்யாத போது பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்,  இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் கூறி வந்தன.

இதனால் ,பெட்ரோல் , டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியை மத்திய அரசு அளித்தது. அதன் அடிப்படையில் தற்போது பெட்ரோல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.

நேற்று மாலை இந்த எரி பொருள் விலை அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29ம் டீசல் லிட்டருக்கு 97 காசும் அதிகரிக்கப்பட்டது.  இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வில் மாநில வரிகள் இடம் பெறவில்லை. அந்த வரிகள் இடம் பெறும் போது உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் ,டீசல் விலை அதிகரித்து காணப்படும்.

பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் நடுத்தர , சாதாரண மக்கள் மிகவும்  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ70 ஐ எட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ70-க்கு கீழேதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்