முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

கடலூர்.

 

கடலூர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.

 

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கடலூர் புதுபாளையத்தைச் சேர்ந்த செல்வி உமா என்ற பயனாளிக்கு ரூ.3,450- மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தையும், காவாலக்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், புடையூரைச் சேர்ந்த அண்ணாதுரை ஆகிய இரண்டு பயனாளிகளுக்கு ரூ.9,120- மதிப்பிலான (தலா ரூ.4560-) இலவச சலவைப் பெட்டிகளையும் வழங்கினார்.

 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விருத்தாச்சலம் வட்டம் சிறுநெவலூரைச் சேர்ந்த மணிவேல் என்ற மாற்றுத்திறனாளி மடக்கு சக்கர நாற்காலி வேண்டியும் மற்றும் கடலூர் புதுவண்டிப்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற மாற்றுத்திறனாளி ஊன்றுகோல் வேண்டியும் மனுகொடுத்தனர். இவர்களின் மனு கிடைக்கப்பெற்றவுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மணிவேல் அவர்களுக்கு ரூ.5800- மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியினையும், சிவக்குமார் அவர்களுக்கு ரூ.450- மதிப்பிலான ஊன்றுகோலினையும் இலவசமாக வழங்கினார்.

 

இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கோ.விஜயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வே.ஜவஹர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்