முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் இல. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம்.

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலெக்டர் இல. சுப்பிரமணியன், அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை ஆகியன கோரி 406 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் அவர்கள் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

 

விழுப்புரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சாலை விபத்தில் இறந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கும் மற்றும் காயமடைந்த 2 நபர்களுக்கும் ரூ.6 இலட்சத்திற்கான காசோலையும், தமிழ்நாடு நோயாளர் நிதியுதவி திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட சங்கராபுரம் வட்டம், லா.கூடலூர் மதுரா சேரத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சக்கரம்மாள் என்பவருக்கு ரூ.25,000ஃ-க்கான காசோலையும், விக்கிரவாண்டி வட்டம், தும்பூர் கிராமம், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 17 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊ. ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர், விழுப்புரம், . ஸ்ரீதர் சார் ஆட்சியர், திண்டிவனம், பத்ரிநாத், தனித்துணை ஆட்சியர் விழுப்புரம், பொ. கிருபானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்), விழுப்புரம், எம். மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர், விழுப்புரம், ஏ.ராஜேந்திரன், உதவி ஆணையர் (கலால்), விழுப்புரம், அ. அனந்தராம், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், விழுப்புரம், ரவிச்சந்திரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ), விழுப்புரம், பிரகாஷ்வேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விழுப்புரம், வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்