முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜிட்டல் பொருளாதாரமே இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் : நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி ஜன 3 டிஜிட்டல் பொருளாதாரமே, இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர்  அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு, இந்தியாவிற்கு சிறந்த ஆண்டாக இருந்தது. உலகில் அதிவேகமாக பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா விளங்கியது. இனி வரும் ஆண்டிலும், இது தொடரும் என உறுதியாக நம்புவதாக மத்திய நிதியமைச்சர்  அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர், பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், வட்டி விகிதமும் குறைய துவங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். புதிய ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சி வருவது என்பது சுமூகமாக நடந்து வருகிறது என்றும், இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி., மசோதா அமல்படுத்தப்படும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் என்றும், கறுப்பு பணம் உள்ளிட்ட ஏராளமான பணம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் உறுதிபட தெரிவித்தார். இதனால், வங்கிகள் கடன் வழங்கும் திறன் அதிகரித்துள்ளது என்றும், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாகவும், இதற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்