முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோதா குழு பரிந்துரைகளை ஏற்காததால் பி.சி.சி.ஐ. தலைவர் - செயலாளர் நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - லோதா குழு பரிந்துரைகளை ஏற்காததால், பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய்ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட்டு  அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, நீதிபதி லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் 70 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்- ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு ஓட்டு மட்டுமே அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்களுக்கு பி.சி.சி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

 தொடர்ந்து அலட்சியம் :
இதனால், லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதால், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளானது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 தலைவர் நீக்கம் :
 அப்போது, லோதா குழுவின் பரிந்துரைகளை ஏற்காத பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் மற்றும் அதன் செயலாளர் அஜய்ஷிர்கே ஆகியோரை, அவர்களது பதவிகளில் இருந்து நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அனுராக் தாகூர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வது பற்றி அவர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குழுவின் தலைவர் நீதிபதி  ஆர்.எம்.லோதா, தாம் எதிர்பார்த்ததைப் போலவே இந்த முடிவு அமைந்திருப்பதாக தெரிவித்தார். இது இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்