முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே. விவேகானந்தன், வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (02.01.2017) கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக மேல்நிலைத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, மின் வசதி, பட்டா வேண்டுதல், கல்வி உதவி தொகை, தரைமட்ட பாலம், மூன்று சக்கர வண்டி, ஓய்வூதிய தொகை, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 193 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார். முன்னதாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் மூழ்கி மரணமடைந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 65 ஆயிரத்திற்கான காசோலைகளை 2 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முடநீக்கு உபகரணங்கள் 11 நபர்களுக்கும், சக்கர நாற்காலி 1 நபருக்கும் என மொத்தம் 12 நபர்களுக்கு ரூ. 63 ஆயிரத்து 400ஃ- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் மற்றும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் 12 மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் கே.விவேகானந்தன், பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாப்பாத்தியம்மாள், தனி துணை ஆட்சியர்; (கலால்) மல்லிகா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சித்ரா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலாஹிஜான், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, முடநீக்கு வல்லுநர் ஜகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்