முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

திருநெல்வேலி.

 

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

 

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் சேரன்மகாதேவி வட்டத்தைச் சார்ந்த ஒரு பயனாளிக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 2015-16ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி வே.மேகாவிற்கு ரூ.2000/-த்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவின் பொறியியல் கல்லூரியில் 02.12.2016 முதல் 04.12.2016 வரை தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மெக்டெலின் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் எஸ்.நவநீதகிருஷ்ணன் மூன்றாம் இடத்தை வென்று, சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை பெற்றார். மாணவன் எஸ்.நவநீதகிருஷ்ணன் கலெக்டர் மு.கருணாகரன் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ். நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்