முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி:கலெக்டர் பிரசாந்த் வடநேரே துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3 நாட்கள்  நடைபெறும் மாநில அளவிலான நீச்சல் போட்டியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து நேற்று துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பழைய மற்றும் புதிய விளையாட்டுகளை பல்வேறு நிலைகளில் நடத்தி வருகிறது. கபாடி, கோகோ, கையுந்துபந்து, கைப்பந்து, கூடைபந்து, வளைகோல் பந்து, கால்பந்து, பூபந்து, இறகு பந்து, டேபிள் டென்னிஸ் போன்றவை பழைய விளையாட்டுகளாகும். பீச்வாலிபால், நீச்சல், டேக்வோண்டா, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜுடோ, கத்திச்சண்டை, குத்துச்சண்டை, ஸ்குவாஷ், டென்னிஸ், வளைபந்து போன்றவை புதிய விளையாட்டுக்களில் சில விளையாட்டுக்கள் வட்ட அளவிலும், சில விளையாட்டுக்கள் கல்வி மாவட்ட அளவிலும், மற்ற விளையாட்டுக்கள் நேரடியாக மண்டல அளவிலும் நடத்தப்படுகிறது. வட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றிபெற்ற மாணவமாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி சதுரங்க போட்டிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை ஒருபிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஒருபிரிவாகவும்  4 பிரிவுகள் என மாணவர்களுக்கு 4 பிரிவுகளிலும் மாணவிகளுக்கு 4 பிரிவுகளிலும் நடத்தப்பட்டுவருகிறது. இவர்கள் வட்ட அளவில் விளையாடி வெற்றிபெற வேண்டும். பின்னர் அதில் 3 இடங்களில் வெற்றிபெறுபவர்கள் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் வெற்றிபெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இதில் முதலிடம் பெறும் மாணவியர்களுக்கு ரூ. 1200 பரிசு தொகையும் பதக்கம் மற்றும் சான்றிதழும் 2ம் இடம்பெறும் மாணவியருக்கு ரூ. 800 பரிசு தொகை பதக்கம் மற்றும் சான்றிதழழும் 3ம் இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு ரூ. 600 பரிசு தொகை பதக்கம் மறறும் சான்றிதழ் கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை நேரடியாக மண்டல அளவில பங்கு பெற்று வெற்றிபெறும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுகின்றனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்க்கு ஒரு பிரிவாகவும், 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்க்கு ஒரு பிரிவாகவும், 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்க்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்படுகிறது. 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு  12 விதமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 17 விதமான போட்டிகளும், 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு  18 விதமான போட்டிகளும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மாநில அளவிலான நீச்சல் போட்டி முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டி வருகிற 4ந் தேதிவரை நடைபெறவுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நீச்சல் அரங்கத்தில் நேற்று காலை 11.15 மணியளவில் மாநில அளவிலான நீச்சல் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த நீச்சல் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1457 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) சு.சந்திரன், திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் பி.சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஏ.முனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago