முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு மின் நிலையங்கள் பட்டியல்: இந்தியா, பாகிஸ்தான் பரிமாற்றம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியா, பாகிஸ்தானில் செயல் படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இருநாடுகளும் நேற்று பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. அணுமின் நிலையங்கள் தொடர் பாக கடந்த 1988 டிசம்பர் 31-ல் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருவரது அணு மின் நிலையங்களை மற்றவர் தாக்கக் கூடாது. இது 1991 ஜனவரி 27-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அணு மின் நிலையங்கள் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம்தேதி இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது வழக்கம். முதல்தடவையாக 1992 ஜனவரி 1-ம் தேதி பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்போது 26-வது முறையாக டெல்லி, இஸ்லாமா பாதில் உள்ள தூதரகங்கள் வாயிலாக இரு நாடுகளும் ஒரே நேரத்தில் நேற்று தகவல்களைப் பரிமாறிக்கொண்டன.

சிறை கைதிகள் விபரம் :
இதேபோல இரு நாட்டு சிறை களில் அடைக்கப்பட்டுள்ள இந்திய, பாகிஸ்தான் சிறைக் கைதிகள் தொடர்பான விவரங்களும் பரி மாறிக் கொள்ளப்பட்டன. கடந்த 2008 மே 21-ல் கையெழுத் தான ஒப்பந்தப்படி சிறையில் உள்ள அடுத்த நாட்டு கைதிகள் அவரது தூதரகத்தைத் தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய இரு தேதிகளில் கைதிகள் பட்டியல் பரஸ்பரம் அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் கைதிகள், மீனவர்கள் பிரச்சினை போன்ற மனிதாபிமானம் சார்ந்த விவகாரங்களில் பாகிஸ்தானுடன் பேசி தீர்வு காண்பதற்கு இந்தியா முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்திய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளவர்களில் யாராவது பாகிஸ்தானியர்கள் இருந்தால் அதை உறுதி செய்யும்படி இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. அதே போல் பாகிஸ்தான் சிறைகளில் ஹமீது நேஹல் அன்சாரி, குல்புஷண் யாதவ் உள்ளிட்ட இந்தியர்கள் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கும்படி இந்திய அரசு கோரியுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் அரசு பதில் அளிக்க மறுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்