முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் பா.ஜ.கவுக்கு பெரும் பான்மை ஆதரவு அளிக்க லக்னோ கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ - உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கட்சிக்கு  ஆட்சி அமைக்க பெரும் பான்மை  ஆதரவு அளியுங்கள் என்று  லக்னோவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அந்த மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். உத்தப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பா.ஜ.க கூட்டம் நேற்று நடந்தது . இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சியினருக்குள்ளேயே மோதிக்கொள்கிறார்கள், அந்த கட்சி எப்படி மாநில மக்களை  காப்பற்ற முடியும் ?

தனது மகனை கட்சியில்  பிரபலப்படுத்த வேண்டும் என நினைக்கும் ஒரு கட்சி  இந்த மாநிலத்தில் எந்த ஒரு பெரும் வெற்றியையும் பெற முடியவில்லை. மற்றொரு கட்சி தனது கறுப்பு பணத்தை வங்கிகளில் பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளது. 3வது கட்சி தனது குடும்பத்தை  பாதுகாக்க பாடுபடுகிறது.¬¬¬ ஒவ்வொரு கட்சியும் தங்கள் நலனில் அக்கறை காட்டி வரும் நிலையில் இந்த மாநிலத்தை  பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையுடன் பா.ஜ.க உள்ளது. இந்த கட்சியால் அது முடியும்.கடந்த 14 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை. இது வன வாச காலமாகவே கருத வேண்டும். அந்த வன வாச காலம் முடிந்து விட்டது.

உத்தரப்பிரதேசத்தில் , 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முழு பெரும் பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். பா.ஜ.க பெரும் வெற்றி பெற நீங்கள் வாக்களியுங்கள்.   மாநிலத்தில் முழு மாற்றம் தேவை.  கடந்த 2014ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது ஏற்பட்ட மகத்தான மாற்றத்தைப்போல, உ.பி மாநில மக்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதனையும் அரை குறையாக விடாதீர்கள். முழு சக்தியும் டெல்லியில் உங்களுடன் உள்ளது. நான்  கறுப்பு பணம், ஊழல் ஒழிப்பு குறித்து பேசுகிறேன் . ஆனால் சிலர் வேறு விதமாக கோஷம் போடுகிறார்கள். இது குறித்து நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். லக் னோவில் இங்கு நடக்கும் கூட்டத்தில் மிகப்பெரும் அளவில் மக்கள் கூடியிருக்கிறீர்கள். இதைப்போன்ற கூட்டத்தைப்போன்ற கட்சி கூட்டத்தை வேறு எங்கும் பார்த்தது இல்லை.உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முழு பெரும் பான்மை பெற வாக்களியுங்கள் . இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்