முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை விரைவில் விடுவிக்க முடிவு : வெளியுறவுத்துறை அமைச்சகம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள 51 தமிழக மீனவர்களை இலங்கை விரைவில் விடுதலை செய்கிறது   என ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  கூறியுள்ளது.இதேப்போன்று தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள் என இந்தியா தெரிவித்தது.  இந்த மீனவர்களை விடுவிக்க இரு நாடுகளும்  தற்போது ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகள் நேற்று மேற்கொண்ட  உடன்படிக்கையை தொடர்ந்து  இலங்கை சிறைகளில் உள்ள 51 தமிழக மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுகிறார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை அமைச்சர் மகிந்தா அமரவீர ஆகியோர் நேற்று  பங்கேற்ற அமைச்சக அளவிலான கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இரு நாடுகளும் எடுத்த இந்த முடிவின் படி இந்த  நாடுகள்  தங்கள் நாட்டில் உள்ள அடுத்த நாட்டின் மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளன. இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளும் விடுவிக்க இலங்கை பரிசீலனை செய்கிறது.

இலங்கை சிறைகளில்  தற்போது 51 தமிழக மீனவர்கள் இருப்பதைப்போல, இந்திய சிறைகளில் இலங்கையைச்சேர்ந்த 3 மீனவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுகிறார்கள்.  கூட்டுக்  பணிக்குழு கூட்டம்  டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று நடைபெற்றது. அந்த கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்த முடிவுக்கு பின்னர் நடந்தது.  கூட்டுப்பணி குழு கூட்டத்தில் எடுக்க முடிவின் படி இது நாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள அடுத்த நாட்டின் மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

 இந்திய மீனவர்கள் , குறிப்பாக தமிழக மீனவர்கள் ஆழ் கடல் பகுதியில் தங்களது பாரம்பரிய நீர் எல்லையான பாக் வளைகுடாவில் மீன் பிடிக்கச்செல்லும் போது, இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. கச்சத்தீவு இலங்கை தாரை வார்க்கப்பட்டதால் ,  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சித்ரவதை செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடருகிறது. . இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக  தற்போதைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி தங்கள் நாடுகளின் சிறைகளில் உள்ள  51 தமிழக மீனவர்களை  இலங்கை விரைவில் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.  கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா மீட்க வேண்டும் என தமிழக அரசு தொடந்து வலியுறுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்