முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2,96,850 மதிப்பிலான உதவி உபகரணங்கள் : கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார் தலைமையில் நேற்று (02.01.2017) நடைபெற்றது.

 

கடனுதவி

 

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 274 மனுக்களை மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரிடையாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.6,900 மதிப்பிலான மூன்று சக்கர வண்டி 1 நபருக்கும், 8 நபர்களுக்கு தலா ரூ.6,900 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 20 நபர்களுக்கு தலா ரூ.1,026 மதிப்பிலான நடைப்பயிற்சி சாதனங்களையும், 13 நபர்களுக்கு தலா ரூ.5,550 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், ரூ.7,080 செவித்துணை கருவியையும், 30 நபர்களுக்கு தலா ரூ.4,500 மதிப்பிலான கற்றல் கற்பித்தல் உபகரண பெட்டிகளும் என 73 நபர்களுக்கு ரூ.2,96,850 மதிப்பிலான உதவி உபகரணங்கள் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்கிகழ்ச்சியின் ;துவக்கமாக 4 நபர்களுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் வழங்கி துவக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) துரை, முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்