நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20_ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள் ஏதேனும் இருப்பினும் மற்றும் விவசாயிகளின் பொதுவான கோரிக்கைகளை தவிர்த்து விவசாயம் சம்பந்தப்பட்ட நீர்ப்பாசனம், இடுபொருட்கள் போன்ற கோரிக்கைகள் மட்டும் தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி_ 643 001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: