காஞ்சிகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம்; எஸ்.பி.,தகவல்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      ஈரோடு

காஞ்சிகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சொந்த கட்டடம் கட்டும் பணி, விரைவில் துவங்கும் என்று ஈரோடு எஸ்.பி., சிவக்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க, தேவையான உபகரணங்கள் வாங்க, 40 லட்சம் ரூபாய் நிதி, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ளோடு, ஆப்பக்கூடல், சத்தியமங்கலம், பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவை விரைவில் திறக்கப்பட உள்ளது. காஞ்சிகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சொந்த கட்டடம் கட்ட இடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: