ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணியிடம்: ஈரோட்டில் 6-இல் நேர்காணல்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      ஈரோடு

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படும். ஓட்டுநர் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நேர்முகத் தேர்வு அன்று 23 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 162.5 செ.மீ.-க்கு குறையாமல், 3 ஆண்டு அனுபவம் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.   எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல்,  கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.  மாத ஊதியம் ரூ. 11,100 வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளர்

  மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், இயற்பியல்  உள்ளிட்ட கல்வித் தகுதிகளுக்கு (12-ஆம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). மாத ஊதியமாக ரூ. 11 ஆயிரத்து 600-ம், அல்லது ஓராண்டுச் சான்றிதழ் படிப்புக்கு (12-ஆம் வகுப்புக்குப் பிறகு ஓராண்டு படித்திருக்க வேண்டும்) மாத ஊதியமாக ரூ. 10 ஆயிரத்து 600-ம் வழங்கப்படும்.    எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறைப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.  மேலும், விவரம் அறிய விரும்புவோர் 73977-24813 என்ற செல்லிடப்பேசியில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: