முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகர செயலாளர் கைது

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் - கொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகரச்செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கொடை;கானல் மலைகளின் இளவரசி என கூறப்படுவது. இங்கு கடந்த ஆண்டுகளில் போதை காளான் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை கன ஜோராக நடந்து வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் போதைகாளான் சாப்பிட்டு கேரள மாணவர்கள் உயிரிழந்தனர். இதே போல நான்கு மாணவர்கள் மயங்கினர்.

கொடைக்கானல் சுற்றுலா நகரம் என்பதனால் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பவர்கள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து தங்கள் வியாபாரங்களை பெருக்கி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாணவர்கள் ஆகியோர் இந்த விற்பணையாளர்களின் குறியாகும். போதை காளான் உண்டு மாணவர்கள் இறந்த பின் கொடைக்கானல் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் 10 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந் நிலையில் கொடைக்கானல் அப்பர் லேக் பகுதியில் கஞ்சா விற்பது பற்றி கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி ஆகியோர் இப்பகுதிக்கு விரைந்து அங்கு கஞ்சா விற்ற அப்சர் வேட்டரி பகுதியை சேர்ந்த சங்கு முருகன்(40) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 2.200 கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்தனர். இவர் கஞ்சாவை தனது காரில் வைத்து விற்பணை செய்துள்ளார். இதனால் போலீசார் இவரின் காரையும் பரிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற சங்கு முருகன் கொடைக்கானல் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்