எல்லையில் ஊடுருவலை தடுக்க அமெரிக்கா கட்டும் சுவருக்கு மெக்சிகோ பணம் தர வேண்டும் : டிரம்ப் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      உலகம்
trump dimension 2016 11 9

வாஷிங்டன்  - எல்லையில் ஊடுருவலை தடுக்க அமெரிக்கா கட்டும் சுவருக்கு மெக்சிகோ பணம் வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். எல்லையில் சுவர்
மெக்சிகோ மக்களின் ஊடுருவலை தடுக்க அமெரிக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என அதிபர் தேர்தலின் போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான அவர் வருகிற 20-ந்தேதி பொறுப்பு ஏற்க உள்ளார்.

பண செலுத்த வேண்டும்
இந்த நிலையில் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் கோடல் ஹில்வில் நடந்தது. இக்கூட்டத்தில் குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஒரு செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் டெலிபோனில் பேட்டி அளித்தார். அப்போது, தேர்தலில் அளித்த வாக்குறுதி படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும். வரி செலுத்தும் நிறுவனம் மூலம் இந்த சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

நேரில் சந்தித்து வலியுறுத்தல்
மேலும், சுவர் கட்டுவதற்கான செலவு முழுவதையும் மெக்சிகோ ஏற்று அதற்கான பணத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என உறுதிப்பட கூறினார். இதே கருத்தைஅவர் கடந்த ஆகஸ்டு மாதம் போனில், அரிசோனா உள்ளிட்ட தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். மேலும் மெக்சிகோ அதிபர் பெனாநியோட்டோவை நேரில் சந்தித்த போதும் வலியுறுத்தினார்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: