அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தது பாராளுமன்றம் !

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      உலகம்
congress certifies(N)

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பாராளுமன்றம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துணை அதிபர் வெளியிட்டார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பாராளுமன்றம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான, முறைப்படியான அறிவிப்பை அமெரிக்க பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் கூட்டுக் கூட்டத் தொடரின்போது அந்நாட்டின் துணை அதிபர் ஜோ பிடன் வெளியிட்டார்.

அதிகாரபூர்வமாக அறிவிப்பு
நியூயார்க் நகரை சேர்ந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், 304 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 227 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின்போது நாட்டின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார் என்று ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அப்போது, சிறிய கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். பின்னர், அவைக் காவலர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக மாநிலவாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சீலிட்ட உறையில் வைத்து துணை அதிபரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பிரதாய ரீதியான அறிவிப்பாக கருதப்பட்டாலும், நாட்டின் அதிபரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் மரபாக அங்கு கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்: