முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2016-ம் ஆண்டில் 2.66 கோடி பக்தர்கள் திருப்பதியில் தரிசனம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருப்பதியில் கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 2 கோடியே 66 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கூறினார்.

ஆன்லைனில் வெளியீடு
திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் நேற்று முன்தினம் பக்தர்களிடம் தொலைபேசி மூலமாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து பேசினார். பக்தர்களுக்கு ஆர்ஜித சேவைக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமாக வெளியிடப்படுகிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவைக்கான தரிசன டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம். ஆர்ஜித சேவை டிக்கெட் நேற்றுமுன்தின்  ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

சுப்ரபாதம் 6,299, அர்ச்சனை சேவை 120, தோமாலா சேவை 120, விசே‌ஷ பூஜை 1,125, அஷ்டதல பாதபத்ம ஆராதனை சேவை 80, நிஜபாத தரிசனம் 1,500, கல்யாண உற்சவம் 10,125, வசந்த உற்சவம் 10,750, ஆர்ஜித பிரம்மோற்சவம் 5,805, சகஸ்ர தீபலங்கார சேவை 12,350, ஊஞ்சல் சேவை 2,700 என மொத்தம் 50 ஆயிரத்து 974 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

டிக்கெட் வழங்க நடவடிக்கை
அதைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ், பக்தர்கள் தெரிவித்த குறைகள், புகார்கள், கேள்விகளும், பதில் அளித்துப் பேசினார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர், கல்யாண உற்சவ டிக்கெட் ஆன்லைன் மூலம் ஒரே குடும்பத்தில் கணவன், மனைவிக்கு ஒரே டிக்கெட்டாக வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், தனித்தனியாக கல்யாண உற்சவ டிக்கெட் வழங்க வேண்டும் என்றார். அதற்கு சாம்பசிவராவ், ஆகம பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தி தனித்தனியாக டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பண்டிகை நாட்களில் ரத்து
தமிழ்நாட்டை சேர்ந்தச் பிரசாந்த் கூறுகையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தமிழ் ஒளிபரப்பு எப்போது தொடங்கும் என்று கேட்டதற்கு, அதற்கு அவர், தற்போது தமிழ் சேனல் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. வரும் மகர சங்கராந்தி பண்டிகை (பொங்கல் பண்டிகை) அன்று தமிழ் பக்தி சேனலில் நிகழ்ச்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றார். மிதியாலகூடாவைச் சேர்ந்த சாய்ராம் என்பவர், ஆன்லைன் மூலமாக சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகிறார்கள். அதனுடன் தங்கும் விடுதிகளும் வழங்க வேண்டும் என்றார். அதற்கு அவர், பிரம்மோற்சவ விழா, ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கியமான பண்டிகை நாட்களில் ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்படுகிறது என்றார்.

10 கோடியே 34 லட்சம் லட்டுகள்...
கடந்த 2016-ம் ஆண்டு 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. லட்டு தயாரிப்பு ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 2017-ம் ஆண்டு 32 லட்சம் காலண்டர்கள், 10 லட்சம் டைரிகள் அச்சடித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் 2 கோடியே 66 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.1018 கோடி கிடைத்துள்ளது. 8-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. துவாதசி அன்று அதிகாலையில் கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்