உ.பி தேர்தல்: வேட்பாளர்கள் - தலைவர்களுடன் மாயாவதி அவசர ஆலோசனை

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      இந்தியா
mayawati 2017 1 7

லக்னோ  - உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் பரபரப்பு
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரை 300 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மூன்றுகட்டங்களாக அறிவித்துள்ளது.

வெற்றி குறித்து ஆலோசனை
இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் 300 வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். வரும் தேர்தலில் வெற்றிபெற தொண்டர்கள் எப்படி செயல்பட வேண்டும்?, வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது, தேர்தல் செலவுகள், மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்வது போன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உணர்த்தும் உண்மை

ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சக்கரையாம், அடிக்கரும்பு இனிக்க நுனி கரும்பு எதற்கு? என்ற பழமொழிகள் உண்டு. நல்ல சொற்கள் இருக்கும் போது துன்பம் தரும் சொல்லை ஏன் சொல்ல வேண்டும் என குறிக்கும் வகையில் அந்த பழமொழி தத்துவமாக மலர்கிறது. ஆனால், கரும்பில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

புதினாவின் சக்தி

புதினாவை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட் சத்துக்கள் உள்ளன.

செல்ஃபி செல்ஃப்ளை

செல்பீ பிரியர்களுக்காக செல்பி ஸ்டிக்கிற்க்கு பதிலாக மினி ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமரா அறிமுகமாகியுள்ளது. இந்த மினி ட்ரோனுக்கு செல்ஃப்ளை (SELFLY) என பெயரிட்டுள்ளனர். கைகளுக்கு அடக்கமான இந்த மினி ட்ரோனை, நமது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு உறையிலேயே வைத்து கொள்ள முடியுமாம்.

தோலுக்கு மருந்து

பூவரசம் பூ, ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூக்கம் கெடும்

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

புதிய வசதி

ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்பில், சேவ் யுவர் பார்க்கிங் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி காரை எங்கே நிறுத்தினீர்கள் என்பதை பதிவு செய்து கொள்ளலாம். கார் நிறுத்தம் குறித்த கூடுதல் தகவல்களையும் இதில் சேர்க்கலாம் என கூகுள் நிறுவனம், தெரிவித்துள்ளது. கார் நிறுத்த தகவல்களையும் இடத்தையும் புகைப்படமாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

இவரை தெரியுமா?

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.