உத்திரமேரூரில் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் த.வெள்ளையன் பங்கேற்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi 2

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நுாக்கலம்மன் கோயில் மண்டபத்தில் நடந்தது சங்கதலைவர் டி.ரமேஷ் தலைமை தாங்கினார் ஜே.விவேகானந்தன் வரவேற்றார் கௌரவ தலைவர் எம்.பி.சண்முக ஆச்சாரி பொருளாளர் எஸ்.நந்தகிஷோர் முன்னிலை வகித்தனர் செயலாளர் கே.வி.சேகர் ஆண்டறிக்கை வாசித்தார் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் த.வெள்ளையன் புதிய நிர்வாகிகளை பாராட்டி பேசியதாவது காஞ்சி மாவட்டத்தில் உத்தரமேரூா் சங்கத்தினர்களையும் நிர்வாகிகளையும் பாராட்டுகிறேன் ராணுவ வீரர் போல திகழவேண்டும் சங்கத்தினர்கள் புகையிலை பாக்கு சிகரெட் மது அருந்தக்கூடாது சங்கத்தின் கூட்டத்திற்கு அனைத்து புதிய நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் உங்களுக்கு ஏதாவது குறைகள் என்றால் நான் தீர்த்து வைப்பேன் உத்தரமேரூர் பாரத ஸ்டேட் மேலாளர் டி.கே.பாலாஜி பேசியது 10ரூபாய் நாணயம் செல்லும் எனவே யாரும் பயப்படவேண்டியதில்லை என்று கூறினார் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.கேசவன் பேசும்போது அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் நல்லது என்றார் காவல்துறை ஆய்வாளர் பி.ரமேஷ் பேசியது உங்களின் கோரிக்கைகள் காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவ மாணவியர் செல்லும் பேருந்தில் நெரிசல் நேரங்களில் சிக்கி செல்லும் மாணவர்களை ஒழுங்குபடுத்தியும் கடைகளில் திருட்டு நடைபெறுவதைதடுக்க தீவிரமாக போலீசார் இரவு நேரங்களில் கண்காணித்து வருகின்றனர் என்றார் கௌரவ தலைவர் எம்.பி.சண்முக ஆச்சாரி பேசும்போது எந்த அரசியல் கட்சிகள் நன்கொடை வசூல்செய்ய வந்தால் பணம் கொடுக்காதீர்கள் உத்தரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நன்கொடை பணம் அளிக்கவேண்டும் என்று கூறினார் மேலும் இக்கூட்டத்தில் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஜே.வெங்கடேசன் பாங்க் ஆப் பரோடா மேலாளர் டி.முரளி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் எஸ். ஸ்ரீதர் தீயணைப்பு துறை அதிகாரி பாலாஜி கம்மாளம்பூண்டி பாங்க் ஆப் இந்தியா மேலாளர் நந்தகிஷோர் மூத்த பத்திரிக்கையாளர் கோ.சந்தான கிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்திபேசினர் முடிவில் ஆர்.கணேஷ்ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்: