முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி: கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி துறை பராமரிப்பிலிலுள்ள எரி, குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடு மண் ஆகிய கனிமங்களை கட்டணமில்லாமல் விவசாய மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 30 கன மீட்டர் அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம். குடியிருப்பு, விவசாய நிலம், மற்றும் குவாரி ஆகியவை, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்துக்குள் உள்ளது என்பதற்கான கிராமநிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று, வருவாய் கோட்டாட்சியரை அணுகி உரிய அனுமதி பெற்றுக் கொள்ளலாம். வணிக நோக்கத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள், கருவூலத்தில் ரூ. 1500 செலுத்தி உரிய படிவத்தில் சான்றிதழைஇணைத்து மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு அனுமதி வழங்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள், சீனியரேஜ் கட்டணம் மற்றும் கனிம கட்டணம் செலுத்தி சுற்றுச்சூழல் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். அவர்களுக்கு அதிக பட்சமாக 3 மாதங்களுக்கு வண்டல் மண், சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தி.மலை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை அனுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்