முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னையில் 4 ஆயிரம் லாரிகளில் குடிதண்ணீர் சப்ளை

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      சென்னை

ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் விவசாய கிணறுகளில் இருந்து சென்னையில் 4 ஆயிரம் லாரிகளில் குடிதண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இப்போது உள்ள தண்ணீர் ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடியாகும். இன்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 590 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.3330 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இப்போது 400 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.சோழவரம் ஏரியில் 79 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது (கொள்ளளவு 881).செம்பரம்பாக்கம் ஏரியில் 503 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது (கொள்ளளவு 3645).சென்னை குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தினமும் 250 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. இப்போது உள்ள தண்ணீர் ஒரு மாதத்துக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago