முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி பிரிவு மாவட்ட அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக 2016-17ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.மாவட்ட அளவிலான போட்டிகள் 14 வயதிற்குட்பட்ட மாணவமாணவிகள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இப்போட்டிகள் முதல்முறையாக விளையாட்டு வீரர்ஃவீராங்கனைகளின் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட ஏதுவாக மத்திய அரசின் திட்டமான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மாநில அரசால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் நீச்சல், கபாடி, பளு தூக்குதல், குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ், தடகளம், டேக்வாண்டோ, வாலிபால், இறகுபந்து மற்றும் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் 08.01.2017 அன்று நடைபெறவுள்ள தேர்வு போட்டிகள் மல்யுத்தம் (றுசநளவடiபெ), கோ-கோ, வூசூ (றுரளார), ஹேண்ட் பால் (ர்யனெடியடட), ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் (புலஅயௌவiஉள), கூடைப்பந்து, வில்வித்தை (யுசஉhநசல), ஜீடோ, சைக்கிளிங் (ஊலஉடiபெ) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்ஃவீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ. 350ஃ-, ரூ. 250ஃ-, ரூ. 150ஃ- பரிசுத்தொகையாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் முதல் இடத்தைப் பெறும் வீரர்ஃவீராங்கனைகள் மற்றும் போட்டிகளில் தலைசிறந்த விளையாட்டு வீரர்ஃவீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான கேலோ விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்வீராங்கனைகளுக்கு முறையே ரூ. 500-, ரூ. 300- மற்றும் ரூ. 200- பரிசுத்தொகையாக வழங்கப்படும். மேலும் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந. நஞ்சப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இறகு பந்து பயிற்றுநர் கே. சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago