முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாகவும், அத்தியவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் : நகராட்சி ஆணையர் இரா.முரளி வேண்டுகோள்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      பெரம்பலூர்

தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் வடக்கிழக்கு பருவமழை சராசரி அளவைவிட குறைவான அளவு பெய்த காரணத்தால் தற்போழுது தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து விடுவிக்கப்படும் காவேரி குடிநீர் குறைவாக பெறப்படுகிறது. எனவே, இந்நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக அத்தியவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

மேலும், குடிநீர் இணைப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறுஞ்சுபவர்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும். மேலும் மின்மோட்டார் வைத்து சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களின் விபரம், குடிநீர் கசிவு மற்றும் குடிநீர் தேவை ஆகிய விவரங்களுக்கு 225285 என்ற நகராட்சியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்