முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாதவர்கள் என பாதிக்கப்பட்ட அனைத்து வசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தகவல்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்புக்கு இணங்க இரண்டாம் கட்டமாக ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் வா.சம்பத், ஆய்வில் உடனிருந்தார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் செய்தியார்களிடம் தெரிவித்ததாவது 2016 வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்து, அந்த ஆய்வினை அரசுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அம்மா அவர்களின் அரசு சேலம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் முகமதுநசிமுத்தீன் அவர்களை நியமித்து பயிர் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 05.01.2017 முதல் நடைபெற்று வருகிறது.

 

 

இதனை தொடர்ந்து, 05.01.2017 அன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஏற்காடு சட்டமன்ற தொகுதி வாழப்பாடி வட்டம், துக்கியாம்பாளையம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆரியப்பாளையம், முல்லைவாடி, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நடுவலூர் தெற்கு, லத்துவாடி ஆகிய இடங்களை நேரில் சென்று பயிர்சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இன்றைய தினம் (07.01.2017) ஓமலூர் சட்டமன்ற தொகுதி மரக்கோட்டை, அமரகுந்தி, மேட்டூர் சட்டமன்ற தொகுதி அரங்கனூர், எடப்பாடி சட்டமன்ற தொகுதி வனவாசி, இருப்பாளி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி தேவன்னகவுண்டனூர், கண்டர்குலமாணிக்கம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நல்லராயன்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்து, பயிர் சேதம் குறித்து கேட்டறியப்பட்டது. சோளம், துவரை, உளுந்து, தக்காளி, அவரை உள்ளிட்ட பயிர்கள் நீர் பற்றாக்குறையின் காரணமாக காய்ந்து விட்ட பயிர்களை ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளின் இழப்பினை கடந்த இரண்டு நாட்களாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகிறார்கள். கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மற்றும் பதிவு செய்யாத விவசாயிகள் என பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயிர்சேதத்திற்குரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செம்மலை, எஸ்.ராஜா, பி.மனோண்மணி, மேட்டூர் சார் ஆட்சியர் மேகநாதரெட்டி, இ.ஆ.ப., இணை இயக்குநர் (வேளாண்மை) சௌந்தரராஜன், தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.பிரபு, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், வட்டாட்சியர்கள் சண்முகவள்ளி, முத்துராஜா, பத்மபிரியா, வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்