அரியலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை அமைச்சர் வளர்மதி நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      அரியலூர்
Pro Ariyalur

அரியலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி மற்றும் முதன்மை செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர், நேற்று (07.01.2016) நேரில் சென்று பார்வையிட்டனர்.

அரியலூர் மாவட்டம், அரியலூர், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வறட்சியால் பாதிப்படைந்த விவசாய நிலங்களை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி மற்றும் முதன்மை செயலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஷம்பு கல்லோலிகர், ஆகியோர் தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் அவர்களும், மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், முன்னிலையில் நேற்று (07.01.2016) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வாய்வின்போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு அரசு தமிழகத்தின் வறட்சி காரணமாக பாதிப்படைந்த விவசாய நிலங்களை வருகிற ஜனவரி 9-ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் தலைமையிலான குழுக்கள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து ஜனவரி 10-ம் தேதி தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களிலம் அரசு அலுவலர்கள் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமான நேரில் (07.01.2016) அரியலூர் ஒன்றியம், ஒட்டக்கோவில் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காசோளம் பயிரிடப்பட்ட நிலத்தினையும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், இடங்கண்ணி கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் பயிரிடப்பட்ட நிலத்தினையும், மதனத்தூர் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் பயிரிடப்பட்ட நிலத்தினையும், உடையவர்தீயனூர் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிரிடப்பட்ட நிலத்தினையும் பார்வையிடப்பட்டுள்ளது என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கங்காதாரணி, கோட்hட்சியர்கள் (அரியலூர்) மோகனராஜன், வட்டாட்சியர் (அரியலூர்) முத்துகிருஷ்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சதானந்தம், வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: