முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட வார்டு 20, பறக்கை செட்டி தெரு, பகுதியில்   டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கலெக்டர் பொது மக்களிடம் தெரிவித்ததாவது:டெங்கு காய்ச்சல் பராவாமல் தடுக்க வீடுகள் தோறும் கண்காணிப்பு பணி, கொசு ஒழிப்பு பணி, புகைமருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் தொட்டிகளுக்கு  கொசுப்புழு உண்ணும் மீன்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் விநியோகித்து வருகிறது.பொதுமக்கள் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு பரவாத வண்ணம் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டியை வாரம் ஒருமுறை பிலிச்சிங் பவுடர் போட்டு சுத்தமாக தேய்த்து கழுவி அதன் பின்னர் தண்ணீர் நிரப்பிட வேண்டும். நோயின்றி வாழ அதற்குறிய முன்னெச்சரிக்கையை நாம் மேற்கொண்டால் நோயிலிருந்து விடுபட்டு டெங்கு காய்ச்சலை தவிர்ப்போம் என கலெக்டர் கூறினார்.இவ்ஆய்வின்போது  மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. ஏம் மதுசூதணண்  மற்றும் நாகர்கோவில் நகர்நல அலுவலர் மரு.எஸ். வினோத் ராஜா  வட்டவிளை நகர்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் உமாராணி நகராட்சி சுகாதார ஆய்வாளர்  மாதேவன் பிள்ளை மற்றும் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்