சங்கரன்கோவிலில் விலையில்லா வேட்டி சேலைகள் அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருநெல்வேலி
snkl mini

சங்கரன்கோவில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, கடையநல்லூர், நான்குநேரி உள்ளிட்ட 15 தாலுகாக்களில் 8 இலட்சம் சேலைகளும், 8 இலட்சம்  வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது.

சங்கரன்கோவில் வட்டத்திற்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் பணியினை கண்காணிக்க உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கி, விழாவினை துவக்கி வைத்து நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.இராஜலெட்சுமி தலைமை வகித்தார்.  நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.  நெல்லை மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் இராஜேந்திரன் வரவேற்று பேசினார். 

அமைச்சர் ராஜலெட்சுமி பேசும் போது, மாண்புமிக முன்னாள் தமிழக முதல்வர் அம்மா தமிழக மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த அரசும் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி நலத்திட்டங்களை செயல்படுத்தும். தற்போது அனைத்து பொதுமக்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் மற்ற இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் பயனாளிகளுக்கு இன்று முதல் வேட்டி சேலைகள் வழங்கப்படும். அதே போல் அனைத்து கார்டுகளுக்கும் ரூபாய் 200 மதிப்புள்ள பொங்கல் பரிசும் வழங்கப்பட உள்ளது. தற்போது உள்ள வறட்சி நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சிரமமில்லாமல் பொங்கல் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் , தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ரவிச்சந்திரன், பாசறை செயலாளர் முருகன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, நகர எம்ஜிஆர் இளைரணி தலைவர் சவுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: