ஈரோடு மாவட்டம் ரூ.626 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு.

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      ஈரோடு
7 1 2017 ph 10 1

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், பி.பெ.அக்ரஹாரம் மற்றும் பவானி வட்டம், தேவபுரம் ஆகிய இடங்களில் 1,82,425 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, வேலைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் .,  தலைமையில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  வழங்கினார்.

 சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 

விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி பேசியதாவது,

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இல்லத்தரசிகளின் வேலைப்பளுவை குறைத்திடும் வகையில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி,  திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம், ரூ.25,000/- மற்றும் ரூ.50,000/- ரொக்கம், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.12,000/-இ பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, வளரிளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள், அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்கள். மேலும் தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையம், மகளிர் கமெண்டோ என ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் சமம் என்பதை அனைவரும் உணரச்செய்தவர் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா .

பெண்கள் மட்டுமின்றி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலை தடுக்கும் வண்ணம் ஊக்கத்தொகை, பாட புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை, வண்ணப்பென்சில்கள், சீருடை, காலணி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள், பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்கள் சத்தான உணவு உண்ண வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் அனைத்து அரசு பள்ளிகளிலும் பல்வேறு வகையான கலவை சாதம், 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள், உலக அறிவை வளர்க்கும் வகையில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்களை வழங்கியுள்ளார்கள். மேலும் ஏழை எளிய மக்களுக்கு  முதலமைச்சர் அவர்களின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.110 கோடி மதிப்பீட்டில் 1,120 வீடுகள், ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம், ரூ.11 கோடி மதிப்பீட்டில் எல்லப்பாளையம் குளம் சீரமைப்பு, ரூ.5 கோடி மதிப்பீட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என மொத்தம் ரூ.626 கோடி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 5,70,379 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்குவதன் அடையாளமாக இன்று ஈரோடு வட்டத்திற்கு உட்பட்ட 1,17,450 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பவானி வட்டத்திற்கு உட்பட்ட 64,975 குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் விழாவினை தொடர்ந்து, திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயிலில், இந்துசமய அறநிலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பாவை விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற திருப்பாவை, திருவெண்பாவை ஆகியவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை  சுற்றுச்சூழல் துறை கே.சி.கருப்பணன்  வழங்கினார்.

 

இந்நிகழ்வுகளில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ், வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன், இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையர் முருகைய்யா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: