முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அமைச்சர் சம்பத் தலைமையில் உயர்மட்ட குழுவினர் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

கடலூர்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 03.01.2017 நாளிட்ட அறிக்கையில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர் நிலை நேரடி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதன் பின்னரே மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்க இயலும் என்றும், நேரடியாக ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும், இதனை மேற்பார்வையிட்டு அறிக்கை அளிக்க ஏதுவாக  அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும், மேற்படி குழுக்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்;கொண்டு அறிக்கையினை அரசுக்கு அளிக்கும் என்றும், குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேவையான நிவாரணங்கள் அனைத்தையும் அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்  அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் தமிழகத்தில் சென்னை நீங்கலாக உள்ள 31 மாவட்டங்களில் வறட்சி நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி கடலூர் மாவட்டத்திற்கு  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  மற்றும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,   ஆகியோர்களை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது               இதனடிப்படையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  மற்றும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,   கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  அவர்களுடன் 06.01.2017 அன்று கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லியநல்லூர் மற்றும்  சின்னகுமட்டி, புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மேலமூங்கிலடி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் மெய்யாத்தூர், திருநாரையூர் மற்றும் எல்லேரி, காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிமங்கலம், குச்சுர் மற்றும் ஆயங்குடி, நல்லூர் ஊராட்சி ஒன்றியம் சித்தூர் மற்றும் சேப்பாக்கம், மங்களுர் ஊராட்சி ஒன்றியம், பாசார் மற்றும் கல்லூர் ஆகிய கிராமங்களில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, வரகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களையும், பயிர் நிலவரங்களையும் ஆய்வு மேற்கொண்டு பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்துள்ள விவரங்கள் குறித்தும், விவசாயிகளின் குறைகளையும், கேட்டறிந்தனர்.               இந்த ஆய்வின்போது  தொழில்துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் இதுவரை வறட்சியால் பாதிப்படைந்த 14 இடங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நெல், பருத்தி, வரகு, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு குறித்த அறிக்கையினை 9-ம் தேதி அரசிற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அறிக்கைகளை சமர்பித்தபின்னர் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  வழியில் நடைபெறும் இந்த அரசு விவசாயிகளுக்கு ஒரு நல்ல அறிவிப்பினை வெளியிடும். பாதிப்படைந்த விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும். விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் இருக்கவேண்டும்.  இந்த அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு. விவசாயிகளுக்கு இந்த அரசு எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,            தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை 62 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 80 சதவிதத்திற்கு மேல் குறைவாக பெய்துள்ளது.

          மாவட்ட அமைச்சர்கள், ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நேரடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்த்து  வயல்வெளி அளவில் நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்த விஞ்ஞான பூர்வமான அறிக்கை அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார்கள். புதியதாக மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வறட்சி குறித்த கையேட்டு வழிமுறைகளின்படி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த கிராமங்களில் 10 சதவீத கிராமங்களில் வயல்வெளி அளவில் உள்ள பயிர் நிலவரம் குறித்து ‘புவன் செயலி” மூலம் புகைப்படம் எடுக்கவேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்படும் இடத்தின் அச்சரேகை, தீர்க்கரேகை ஆகியவை பதிவாகும். இதன்மூலம் விஞ்ஞான பூர்வமாக வறட்சி பாதித்த இடம், வறட்சி நிலை உறுதி செய்யப்படும்.  வறட்சி பாதிப்பு குறித்து உயர்மட்ட குழு ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கையினை தமிழக அரசிற்கு சமர்பித்து, தமிழக அரசின் மூலம் மத்திய அரசிற்கு தமிழக அரசின் வறட்சி நிலை தெரிவிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

          வறட்சியினால்  விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை குறைக்கும் நோக்கத்துடன் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பயிர்க்காப்பீட்டு திட்டமான பாரத பிரதமர் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளை அதிக அளவில் சேர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பெருமளவில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த காலங்களில் மாநில அளவில் 7-8 இலட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது சுமார் 13 இலட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு பயிர்க்காப்பீட்டுத்திட்டத்திற்கு தமிழக அரசால் ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரூ.410 கோடி விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு இப்பயிர்க்காப்பீடு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெற்பயிர் காப்பீடு செய்யும் செய்யும் தேதி முடிவடைந்த நிலையில், இதர பயிர்களான மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இப்பயிர்களை உடனடியாக காப்பீடு செய்து கொள்ளலாம்.  இதனால் அரசு வழங்கும் வறட்சி நிவாரணத்துடன் கூடுதலாக காப்பீட்டுத்தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு குறைய வாய்ப்புள்ளது.கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி  தொழில்துறை அமைச்சர் அவர்களும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ககன்தீப் சிங் பேடி அவர்களும் கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த 14 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். கடலூர் மாவட்டத்தில் ஆண்டு மழையளவு 1206.7 மி.மீ. கடந்த ஆண்டு சராசரி மழையளவு 588.32 மி.மீ. இது 51.24 சதவீதம் குறைவானதாகும். பொதுவாக கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் அளவு 697.8 மி.மீ. கடந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை அளவு 128.11 மி.மீ. இது 81.64 சதவீதம் குறைவாகும். இதனால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், நீர்தேக்கங்களிலும் வறட்சி நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் மூலம் 425 கிராமங்களில் உள்ள இடங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 43 கிராமங்களில் புதிய தெழில்நுட்பத்தின்படி வறட்சி குறித்த உண்மை நிலை (புசழரனெ வுசரவாiபெ) தெரிவிக்கும் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை  தொழில்துறை அமைச்சர்  தலைமையிலான உயர்மட்ட குழு மேற்பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்கள். மேலும் அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்கள்.

கடலூர் மாவட்டத்தில் 18109 ஹெக்டேரில் நெல் சாகுபடியும், 18442 ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடியும் 13713 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும், 4800 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யும் நிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பயிர்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இதுவரை நமது மாவட்டத்தில் 71241 விவசாயிகளை பதிவு செய்துள்ளோம். 63528 ஹெக்டேர் நிலங்கள் இக்காப்பீட்டுத்திட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. 5.79 கோடி அளவில் காப்பீட்டு பிரிமியம் தொகை விவசாயிகளால் செலுததப்பட்டுள்ளது. ரூ.383.74 கோடி மதிப்பிற்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் சாகுபடிக்கான காப்பீட்டின் பதிவு நாள் முடிவுற்றுள்ளது. மக்காச்சோளம் மற்றும் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் இன்னும் மூன்று தினங்களுக்குள் அனைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பயிர் காப்பீட்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே விவசாய பெருங்குடி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி; பிரதமர் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறவேண்டும். அடுத்தகட்டமாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்களால் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையை  மாவட்ட நிர்வாகத்தால் அரசிற்கு சமர்பிக்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

இந்த வயல்வெளி ஆய்வின்போது காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி. கலைச்செல்வன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட வருவாய் வருவாய் அலுவலர் கோ.விஜயா, சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மனோகரன், வேளாண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago