திருப்பூர் மாவட்டம, அவிநாசி வட்டம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, . நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      கோவை
AA

திருப்பூர் மாவட்டம,  அவிநாசி வட்டம்,  பெருமாநல்லூh, ஈட்டிவீரம்பாளையம்  பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, .  நேரில் பார்வையிட்டு இன்று (07.01.2017) ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை குறைவாக பெய்ததால் ஏற்பட்ட வறட்சி குறித்து வேளாண்துறை மற்றும் வருவாய் துறையினர் கிராம வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர்.  மாவட்ட கலெக்டர் , திருப்பூர் வட்டாரத்தில் ஈட்டிவீரன்பாளையம்  வருவாய் கிராமத்தில்  வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  கள ஆய்வு மேற்கொண்டார்.  இக்கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு புவன் சென்னை  செயலி மூலம்  பாதிக்கப்பட்ட பயிர்களை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்திட களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வறட்சி குறித்து ஆய்வு பணி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரங்கநாதன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: