முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

 

விழுப்புரம்,

 விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் வறட்சியால் பாதிப்படைந்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பு பணிகள் குறித்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

2016 வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் சேதமடைந்தததை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிப்படைந்த கிராமங்களின் பயிர் சேதங்களின் உண்மை நிலை அறிதல் மற்றும் விரிவான கணக்கெடுப்பு பணி செய்தல் குறித்தும், புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகளை உடனுக்குடன் சமர்ப்பித்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு வட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் வட்டத்திற்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கைபேசி எண்.9445000424, வானூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) விழுப்புரம் கைபேசி எண்.9445461760, விக்கிரவாண்டி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர்  துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். முண்டியம்பாக்கம் கைபேசி எண்.9445074612, திண்டிவனம் வட்டத்திற்கு சார் ஆட்சியர் திண்டிவனம் கைபேசி எண்.9445000423, செஞ்சி வட்டத்திற்கு வடிப்பக அலுவலர்  துணை ஆட்சியர், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை லிமிடெட். செம்மேடு, செஞ்சி கைபேசி எண்.9442587841, மரக்காணம் வட்டத்திற்கு உதவி ஆணையர் (கலால்) விழுப்புரம் கைபேசி எண்.9445074604, மேல்மலையனூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (சிப்காட்) திண்டிவனம் கைபேசி எண்.8526596322, திருக்கோவிலூர் வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் திருக்கோவிலூர் கைபேசி எண்.9445000422, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.7338801282, கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர்  விழுப்புரம் கைபேசி எண்.9940421295, கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி கைபேசி எண்.9445000421, சங்கராபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9894347350, சின்னசேலம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விழுப்புரம் கைபேசி எண்.9445000200 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள், அந்தந்த வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருடன் கூட்டம் நடத்தி, கீழ்காணும் அறிவுரைகளை வழங்கி வறட்சி குறித்த கணக்கெடுப்புப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கண்டறியப்பட்டு, அவற்றில் 10 சதவிகித பாதிப்படைந்த கிராமங்களில், கிராமத்தில் உள்ள ஒரு பயிருக்கு, அதிகம் பாதிப்படைந்த 5 நிலங்கள் என தெளிவு செய்து, டீhரஎயn யுpp என்ற செயலி மூலம் பாதிப்படைந்த பயிர்களை புகைப்படம் எடுத்து இயங்கலையில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

மேற்படி  உண்மைத் தன்மை அறிந்தும், ஆய்வினை உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.  ஆய்வு செய்யப்பட்ட நிலங்களில் 25 சதவீதம் நிலங்களை உதவி இயக்குநர் வேளாண்மை மற்றும் வருவாய் ஆய்வாளர் (அ) துணை வட்டாட்சியர் நிலையில் மேலாய்வு செய்யப்பட வேண்டும்.  மேற்படி பயிர் சேதத்தினை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைவரும் பயிர்சேத கணக்கெடுப்பினை கண்காணித்து உரிய படிவத்தில் அறிக்கையினை  அனுப்பி வைக்க வேண்டும்.

மற்றும் அனைத்து கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலர் இணைந்து விரிவான கணக்கெடுப்பு பணியினை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும்.  கிராமம் வாரியாக படிவத்தினை தயார் செய்து, தகுந்த புகைப்படங்களை இணைத்து வட்டத்திற்கான ஒருங்கிணைந்த அறிக்கையினை அனுப்ப வேண்டும்.  மேற்படி பணியினை மண்டல அலுவலர்கள் கண்காணித்து, தினசரி பணி முன்னேற்ற அறிக்கையினை கலெக்டர் அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

பாதிப்படைந்த நிலத்தின் விவசாயியினை நிற்க வைத்து, சம்பந்தப்பட்ட கிராமம் தான் என்று அடையாளம் காணும் வகையில் தேதி மற்றும் நேரத்துடன் புகைப்படம் எடுத்து புகைப்படத்தின் பின்புறம் கிராமத்தின் பெயர், விவசாயியின் பெயர், புல எண், விஸ்தீரணம், பயிர்வகை, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை ளுமநவஉhஆல் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா 2016  பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காப்பீட்டு மாத சந்தா செலுத்த தவறியவர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் செலுத்தி பயிர்களை காப்பீடு செய்தல் வேண்டும் என்று விவசாயிகளை அறிவுறுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். பாதிப்படைந்த விவசாயிகள் அனைவரும் விடுபடாமல் மேற்படி கணக்கெடுப்பில் பயிர்சேதங்கள் முழுமையான அளவில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago