முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் சேர 09.01.2017 திங்கள் கிழமை கடைசி நாள்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      ஈரோடு

பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் சேர 09.01.2017 (திங்கள் கிழமை)       கடைசி நாள்

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் நெல்- ஐஐஐ (நவரை),  நிலக்கடலை,  எள், கரும்பு,  பருத்தி,  வெங்காயம்,  வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்திட 09.01.2017 அன்றே  கடைசி நாளாகும்.  எனவே அனைத்து அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கும் மேற்கண்ட பயிர்களுக்கான பிரீமியத் தொகையினை உடன் செலுத்திடவும். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் ஷெட்யூல்டு வங்கிகளில் பிரீமியத் தொகையினைச் செலுத்தலாம்.

மேலும் தகவலுக்கும் விபரங்களுக்கும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலவலகங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள தகவல் மையங்களை நாடுமாறு மாவட்ட கலெக்டர், ஈரோடு  கேட்டுக் கொள்கிறார்.  பிரீமியத்தெகையை வங்கி/ தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் செலுத்தலாம் அல்லது வங்கி வரைவோலையாக எடுத்து (டிடி)  விண்ணப்பிக்க இயலும்.

ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரீமிய விபரம்.

நெல்                                 -               ரூ. 390/-

நிலக்கடலை                    -               ரூ.338/-

எள்                                   -               ரூ.158/-

கரும்பு                              -               ரூ.1392/-

பருத்தி                             -               ரூ. 1050/-

வெங்காயம்                     -               ரூ.1600/-

வாழை                             -               ரூ.3450/-

மரவள்ளி                         -               ரூ.1450/-

 

குறைந்த பிரீமியம் செலுத்தி நிறைந்த இழப்பீடு பெற  இன்றே தயாராகி 09.01.2017 அன்று  பிரீமியத் தொகையைச் செலுத்திடுவீர். வறட்சி நிவாரணமல்லாது பயிர் காப்பீட்டுத் தொகையினைப் பெற இதுவே தக்க தருணம். விரைந்து திட்டமிட்டு கூடுதல்  விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற  மாவட்ட கலெக்டர் ஈரோடு  கேட்டுக் கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்