ரங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      ஈரோடு

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சுவாமிக்கு இன்று மோகினி அலங்காரம் செய்யப்படுகிறது. இன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக, ஈரோடு கோட்டையில் எழுந்தருளியிருக்கும், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாஇன்று  நடக்கிறது. திருவிழா தொடக்கமாக, இன்று மாலை உற்சவர் மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இன்று அதிகாலை, 2:45 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனம், மாகா தீபாராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி, திருவீதி உலா செல்கிறார். விழாவில் கலந்து கொள்ள, பக்தர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்: