முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் டிக்கெட் பெற புதிய செயலி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி : ரயில் டிக்கெட்களை விரைவாக பெறுதல் உட்பட 5 வகையான வசதிகளை பெற புதிய செயலியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்  விரைவில் தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக  உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் பயணிகளுக்கு செல்போன் மூலம் பல்வேறு வசதிகள் எளிமையாக கிடைக்கும் வகையில் ரயில்வே துறை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஐஆர்சிடிசி இணைய தளத்தில் உள்ள பல்வேறு வசதிகளை செல்போன் செயலி மூலமும் பெறும் வகையில் ‘ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்’ என்ற பெயரில் புதிய செயலி அறிமுகமாகிறது.
இதன் மூலம் ரயில் டிக்கெட்டை வேகமாக முன்பதிவு செய்ய முடியும், டிக்கெட்டை ரத்து செய்யவும் முடியும், உணவு ஆர்டர் செய்வது, கால்டாக்சி, ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் முன்பதிவு, ஹோட்டல் அறை முன்பதிவு, போர்ட்டர் சேவை கோருவது, உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்ட புதிய செல்போன் செயலியை உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இந்த புதிய செயலி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago